திருநெல்வேலி: ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணையார்குளத்தை சேர்ந்த முருகவேல் என்பவரின் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகளையும், இளையநயினார் குளத்தை சேர்ந்த சிவனம்மாள் 55, என்பவரின் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 6 ஆடுகளையும், நக்கனேரியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 50, என்பவரின் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகளையும், கடந்த 23.08.2021 அன்று மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் இதேபோல் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பிச்சை 59, என்பவரின் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மூன்று ஆடுகளையும், மற்றும் உதயத்தூரை சேர்ந்த முப்பிடாதி 49 என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்கள் இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வள்ளியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் தலைமையிலான போலீசார் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தநிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்டது கூடங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் 21 என்பது தெரியவந்தது.
மேற்படி அஜித்குமாரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து 8 வெள்ளாடுகள் மற்றும் ஆடுகளை விற்று வைத்திருந்த பணம் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் அஜீத்குமாரை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.