திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல்நிலைய பகுதியில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வந்த முத்து,முழியன், அர்ஜீன், விஜயகுமார், அருண்குமார் ஆகியோர்கள் மற்றும் கோட்டை காவல்நிலைய பகுதியில் ,தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வசந்த், வரதராஜன், ஆகியோர் தொடர்ந்து வழிப்பறி குற்றச்செயல்களில், ஈடுபடுவதை தடுப்பதற்காக, ஆய்வாளர் அவர்களின் அறிக்கையின்படி குற்றவாளிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்து, ஒரு வருட காலத்திற்கு வழிப்பறி, பொது அமைதிக்கு குந்தகம் போன்ற குற்றச்செயல்களில், ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ளார்கள்.
நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், அதனை மீறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் உட்பட 5 நபர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. ஜிகார்த்திகேயன் ஐ.பி.எஸ், அவர்களின் பரிந்துறையின்படி, திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால், மீதமுள்ள காலத்திற்கு சிறையில், அடைக்க உத்தரவிட்டார்கள். இவர்களில், 2 நபர்களுக்கு 250 நாட்கள் மேல் சிறைதண்டனையும், 01 நபருக்கு 200 நாட்கள் மேல் சிறைதண்டனையும், 01 நபருக்கு 100 நாட்களுக்கு மேல் சிறைதண்டனையும் மற்றும் 100 நாட்களுக்குள் ஒரு நபருக்கும் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.