சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய முதலில் போலீசார் குழு அமைத்து தேடி வந்தனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில், சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன், ரூ.4 லட்சத்தில் அதிநவீன ‘ட்ரேக்கர்’ கருவியை வாங்கியுள்ளார்.இக்கருவியை கொலை, கொள்ளை சம்பவங்கள்நடக்கும் இடத்தில் வைத்து, சம்பவம் நடந்த நேரத்தை கணக்கிட்டு, அந்நேரங்களில் இப்பகுதியில் அலைபேசியில் பேசியவர் விபரங்களை, டவர் மூலம் கண்டறிந்து, அதன் மூலம் கிடைக்கும் அறிக்கையை வைத்து, குற்றவாளிகளை எளிதில் கைது செய்யலாம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை