கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா கள்ளச்சாராயம் லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம் ஏமப்பேர் கிராமம்,முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன் (21), என்பவர் கரியப்பநகர் செல்லும் வழியில் கஞ்சா விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார், அப்போது அவரிடமிருந்து 1.1kg கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இவர் கஞ்சா விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆதிகேசவன் என்பவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.