திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V. சியாமளா தேவி, ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் (05.01.2026) SJHR (Social Justice & Human Rights) பிரிவின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ரூபி அவர்களின் தலைமையில் மாடப்பள்ளி தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு POCSO சட்டம், குழந்தை திருமணத்தின் தீமைகள், இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அவசர உதவிக்காக பயன்படுத்த வேண்டிய 181, 1098 ஆகிய உதவி எண்கள் மற்றும் Kaaval Udhavi செயலியின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்தும், சட்ட விழிப்புணர்வும் பெறும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.
















