காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவோர் மீது காவல்துறை செயலி கண்காணிப்பின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சாமுண்டீஸ்வரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர்கள் அது செல்லிடப்பேசியில் கடந்த சில தினங்களாக ஸ்மார்ட் கார்ட் என்ற செய்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர் செயலி மூலமாக பொதுமக்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை கண்காணிக்க முடியும். சம்பந்தப்பட்ட நபரின் வாகனமும் அவரது புகைப்படமும் இதில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து விதிகளை மீறி மீண்டும் மீண்டும் வாகனங்களில் சுற்றுவதாக ஆயிரத்து 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறினார்.