மதுரை : தேவர் ஜெயந்தி விழா இன்று தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
-
லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் இன்று காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
-
விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.
-
நத்தம் ரோடு, அழகர் கோயில் ரோடு ஆகிய பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் சாலையில் திரும்பி மாற்றுப்பாதையாக ராஜா முத்தையா மன்றம், கேகே நகர், அண்ணா நகர் மெயின் ரோடு, பாலம் காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும்.
-
அதேபோல் மாட்டுத்தாவணி ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டில் வரும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், இளைஞர் விடுதி, பந்தய சாலை, தாமரை தொட்டி, நத்தம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
-
வடக்கு வெளிவீதியில் இருந்து யானைகல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேஷன் ரோடு லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, E2E2 சாலை, அரசன் ஸ்வீட் பெரியார் மாளிகை வழியாக செல்லவேண்டும்.
-
திண்டுக்கல் ரோடு- தத்தனேரி பகுதியிலிருந்து, அழகர் கோயில் ரோடு, நத்தம் ரோடு செல்லும் வாகனங்கள் குலமங்கலம் ரோடு, பாலம் ஸ்டேஷன் சந்திப்பில், திரும்பி குலமங்கலம் ரோடு வழியாக சென்று மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.
-
மேலமடை பகுதியிலிருந்து, கோரிப்பாளையம் நோக்கில் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பிலிருந்து, குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
-
தேவர் ஜெயந்தி விழாவிற்காக நகருக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர, பசும்பொன் செல்லும் இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுசாலை வழியாக செல்ல வேண்டும்.
-
தேவர் ஜெயந்தி விழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வருவோர் இருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து பயணிக்கவும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன், சீட் பெல்ட் அணிந்து பயணிக்கவும் மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே இன்று தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு வியாபாரப் பெருமக்கள், வாகன ஓட்டுனர்கள், பொது மக்களின் நலன் கருதி, இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப்பாதையை தற்காலிகமாக பயன்படுத்துமாறு மதுரை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா