சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் திருமதி. பேபி உமா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் தேவகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்