ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக தேவகோட்டை நகரில் வங்கி ATM களில் பணம் எடுக்க வரும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவி செய்து பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து அவரது ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு பின் நம்பரை தெரிந்து கொண்டு கையில் இருக்கும் ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிவிட்டு எனது அருகில் இருந்த ATMல் உள்ள நகைக்கடையில் சென்று அந்த கார்டை பயன்படுத்தி நகை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கணேஷ்குமார் அவர்கள் அறிவுரைப்படி தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன்,சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் காவலர் சிலம்பரசன் சோனை முத்து, ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று தேவகோட்டை கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் வைர மண்டபம் ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இருசக்கரத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் காவல்துறையின் விசாரணையில் வேறு வழி இல்லாமல் உண்மையை ஒப்புக்கொண்ட மேற்படி வாலிபரை விசாரணை செய்ததில் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் அடிக்கடி தேவகோட்டை நகருக்கு வந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் ஏடிஎம் கார்டுகளை வாங்கி பணம் எடுப்பது போல் வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அவரது கேடிஎம் கார்டில் இருந்த பணத்தை திருடி செல்வதுடன் அரியலூர் நகைக்கடைகளில் நகைகளாக வாங்கியதையும் ஒப்புக்கொண்ட வரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின்னர் மேற்படி நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மேற்படி நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மேற்படி நபரின் புகைப்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனைத்து வங்கி ATM களிலும் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதுபோன்று ஏமாற வேண்டாம் என காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி