கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது..வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. இங்குள்ள மொத்தம் 15 வார்டுகளில் அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றது .திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது..வெள்ளலூர் 12வது வார்டு அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றிபெற்றார். இதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணா நகர்பகுதியில் தி.மு.க.வின் ஆதரவாளர்கள் ரெனி ( வயது 27) பிரெடி ( வயது 29) ஆகியோரை அதிமுக ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்