தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் கமிஷனால் ஏற்படுத்தப்பட்ட பறக்கும் படையினர் கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இன்று நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், கோவை சாய்பாபாகாலனி அழகேசன் ரோட்டில், 118 கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட நிலையான கண்காணிப்பு குழு பொறுப்பு அதிகாரி தனலட்சுமி, தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது சாய்பாபாகாலனி, கே.கே.புதூர், காளியம்மாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடமிருந்து முறையான ஆவணங்களின்றி 73 ஆயிரத்து 420 ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றி கோவை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.இதே போல நேற்று இரவு 11 மணியளவில், கோவை சரவணம்பட்டி சத்தி ரோடு ராமகிருஷ்ணாபுரம், வாட்டர் டேங்க் அருகில் 118 கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை பொறுப்பு அதிகாரி ராஜலட்சுமி தலைமையில், வாகன தணிக்கை மேற்கொண்ட போது, சி.எம்.எஸ். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயர் உள்ள வாகனத்தில் மனோஜ்குமார் என்பவர் முறையான ஆவணங்களின்றி 78 லட்சத்து 900ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றி கோவை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர், அந்த வாகன ம் சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில், கோவை சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்ஸி, மசக்காளிபாளையம் ரோட்டில், 121 சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை பொறுப்பு அதிகாரி பாரதி தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது, சுங்கம் காந்திநகரை சேர்ந்த தாமஸ் என்பவரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரவின் ஆகியோரிடமிருந்து, சுமார் 1000 கிலோ அளவுள்ள ரேசன் அரிசியை 50 கிலோ அளவுடைய 20 மூட்டைகளில் பொலீரோ வாகனத்தில் கொண்டு வந்ததை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8:30 மணியளவில், கோவை காட்டுர் ராமகிருஷ்ணா மருத்துவமனை அய்யப்பன் கோவில்ரோடு சந்திப்பில், 121 சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை பொறுப்பு அதிகாரி சந்திரபிரியா தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது, வால்பாறையை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் தனது டொயோட்டா இட்டியோஸ் காரில் உதயசூரியன் சின்னம் ஸ்டிக்கர் 24ம், திமுக வேட்பாளர் ஸ்டிக்கர் 20-ம், வட்ட வடிவிலான ஸ்டிக்கர் 350-ம் காலண்டர்கள் 250-ம் கொண்டு வந்ததை கைப்பற்றி சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்