மதுரை: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கொண்டு செல்லப்
படுகிறதா, என்பதனை கண்காணிக்க தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது.
பரவை – மதுரை சாலையில் வேகமாக சென்ற காரை மடக்கி வாகன சோதனை செய்தபோது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.78690 ரூ பணத்தை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த சமயநல்லூர் போலீசார் மற்றும் பறக்கும் படை தாசில்தார் திரு.சரவண பெருமாள் பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி