தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19.ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள், கலவரங்கள்,சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும், பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.