தேனி : தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிடாரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சுவாமிநாதன், இ.கா.ப., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா பிரியா, இ.கா.ப., மற்றும் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. A. பிரதீப், இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் காவலர்களின் குறை தீர்ப்பு மனுக்களை பெற்றுக் கொண்டு, தேனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி காவல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
















