தேனி : தேனி மாவட்டத்தில் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தேனி மாவட்ட காவல்துறை மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்கோச் விருதானது, விருது பெற்றவர்களால் ஒரு சுயாதீன அமைப்பினால் வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த கெளரவமாக மதிப்பிடப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் ஒவ்வொரு காவல்துறையினரும் மேற்கொண்ட கடின உழைப்பினாலும், மூத்த அதிகாரிகளின் மதிப்புமிக்க வழிகாட்டுதலினாலும்,கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தேனி மாவட்ட காவல்துறை தொழில்நுட்பம், மக்கள் ஆதரவு மற்றும் ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலம் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.காப., அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் கோவிட்-19யின் நோயின் தாக்கம் மிகவும் கடினமாக இருந்த காலங்களில் கடுமையாக உழைத்த தேனி மாவட்டத்தின் அனைத்து காவல் துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி