தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி சந்தை பகுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்றின் தீவிரத்தை எடுத்துக்கூறியும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தங்களின் வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசத்தின் அவசியத்தையும் எடுத்து கூறினர். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கியும், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தேனி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.குருசாமி