தேனி: தேனி பொம்மையை கவுண்டன் பட்டி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ராம் பிரசாத் (30).இதே தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சிலர் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்
ராம் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் இதை கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அதே பகுதியில் மோட்டார் பைக்கில் ராம்பிரசாத் வந்து கொண்டிருந்த போது அப்போது இதை தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தினேஷ், வீராச்சாமி மகன் மதன், பால்ராஜ் மகன் சூர்யா, சிவராமன் மகன் அருள் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து ராம்பிரசாத்தின் சகோதரர் ரமணன் போலீசில் புகார் செய்தார். அல்லிநகரம் போலீசார் 4 பேரை கைது செய்தனர்