தேனி : தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி உட்கோட்டம் கடமலைக்குண்டு பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P. கலைக்கதிரவன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை அளிக்கப்பட்டது.
















