தேனி: தேனியில் இன்று காலை நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.தேனி மாவட்டம், தேனியிலிருந்து – போடி செல்லும் சாலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி அலுவலக அலுவலகத்தின் அருகில் பைபாஸ் சாலையில் ‘பதிவு எண் கொண்ட கார் சென்றது. அப்போது அந்த வழியே லாரி ஒன்று வந்தது. இரண்டும் நேருக்கு நேர் மோதியதில விபத்து ஏற்பட்டு கேரளாவை சேர்ந்த ரியாஷ் (30), ஜெய்னுதீன் (40), சமீனா(40), பாத்திமா (60), ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனிஅரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.















