தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசரகாலங்களில் காவல்துறையின் மூலம் உடனடி உதவி மற்றும் இதர சேவைகளை பெற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய காவல் செயலி எனும் சிறப்பான செயலியை மாவட்ட காவல் துறை சார்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.
பெண்கள் மற்றும் இதர பயனாளிகள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள “சிவப்பு நிற அவசரம்” என்ற பொத்தனை அழுத்துவதன் மூலம் பயனாளர்களின் விபரம், தற்போதைய இருப்பிட விபரம் உள்ளிட்ட தகவல்களை குறுகிய அளவிலான வீடியோ கட்டுப்பாட்டு அறையின் மூலமாக பெறப்பட்டு உடனடியாக துரித சேவை வழங்கப்படும் எனவும்,
இக்காவல் உதவி செயலியினை பெற Google Play Store,App Store மற்றும் படத்தில் கண்ட QR Code வழியாக ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,
அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறை-04546-250100, ஹலோ போலீஸ் தேனி-8870985100, சைபர்கிரைம் இலவச உதவி எண்-1930, சைபர்கிரைம் காவல் நிலைய உதவி எண்கள்-04546-294042, 04546-294043, -http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகாராக தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே இ.கா.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதுசமயம்,தேனி மாவட்ட வாழ் பெண்கள் மற்றும் பயனாளர்கள் “காவல் உதவி செயலியினை” பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் நலன் கருதி அறிவித்துள்ளது.