சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, E3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 27.6.2021 அன்று கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆழ்வார்பேட்டை, கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியை கண்காணித்த போது,
அங்கு சட்ட விரோதமாக ஹூக்கா பார் நடத்திய யாமன், வ/31, ஆழ்வார்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 ஹுக்கா பைப்புகள் மற்றும், ஹுக்கா உபகரண பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் யாமன் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.