வேலூர்: மத்திய பிரதேச மாநிலத்தை சேர்த்த தேசிய மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா என்ற வீராங்கனை நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் இன்று 20.01.2023-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் தேசியவீராங்கனை ஆஷா மாலியாவை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு. M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் வேலூர் சரக அலுவலகத்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவருடைய விழிப்புணர்வு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளையும் வழங்கினார்.