நாமக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சு. விமலா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையிலும் வாக்காளர் விழிப்புணர்வு மாறத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே வாக்குப்பதிவின் முக்கியத்துவம், ஜனநாயக கடமையாக வாக்களிக்கும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாறத்தானில் அரசு அதிகாரிகள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவில், அனைவரும் தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
















