தூத்துக்குடி : 71வது தேசிய மாணவர் படை தினத்தை (NCC Day Celebration) முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இன்று (23.11.2019) காலை 71வது தேசிய மாணவர் படை தினத்தை(NCC Day) முன்னிட்டு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள 29ஆவது தமிழ்நாடு படைப்பிரிவு (29TN Indep Coy) அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் வழியாக சென்று குரூஸ்பர்னாந்து சிலையிலிருந்து வலது புறமாக திரும்பி மீண்டும் தேசிய மாணவர் படை அலுவலகம் வந்தடைந்தது.
இந்த பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு 29 ஆவது படைப்பிரிவு இராணுவ அதிகாரி லெஃடிணென்ட் கர்னல் திரு. வெற்றிவேல் அவர்கள் தலைமையிலும், இளநிலை இராணுவ அதிகாரிகள் (Junior Comssioned Officers) திரு. அணில் மற்றும் திரு. தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 29ஆவது படைப் பிரிவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தேசிய மாணவர் ராணுவம் மற்றும் கடற்படையினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிடைம நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி