சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய பத்திரிகையாளர் தினம் என்பது ஊடக சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான தைரியத்துடன் இயங்கும் இதழியல் துறையின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான இன்றைய நாள் இந்தியா முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’
பாரதியின் இந்த எழுச்சி வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு இந்த சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்டு அதை ஊருக்கு உரக்கச் சொல்லும் தைரியம் படைத்த அனைவருமே சுதந்திர உணர்வு மிக்க பத்திரிகையாளர்களே!
ஒரு துடிப்பான ஜனநாயகம் அமைய, சுதந்திரமான ஊடகம் தேவை. பத்திரிகைச் சுதந்திரத்தை அனைத்து வகைகளிலும் நிலைநாட்ட நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டும் முயற்சியாக, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கம், இந்திய குடியுரிமை பெற்ற ஒவ்வொரு குடிமகனையும், குடியுரிமை நிருபர்களாக களத்தில் இறக்கியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் அவர்ளை சுற்றி நிகழும் சம்பவங்களை , நிகழ்வுகளை பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள்.
தேசிய பத்திரிகையாளர் தினமான நவம்பர் 16 தேதியை பத்திரிகையாளர் நலனுக்காக பிரத்தனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்நாளில் ஆதரவற்றோருக்கு ஆதரவாக, மதுரவாயல் தமிழ்நாடு சமூக பொதுநல சங்கத்தில் தங்கியுள்ள (Tamil nadu Social Welfare Association ) ஆதரவற்ற குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ளோருக்கு உணவு வழங்கப்பட்டது. நோய் இல்லாமல் வாழ காப்பகத்தை சுத்தமாக வைத்து கொள்ள பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள சுத்தம் செய்யும் துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் காவல் துணை ஆணையர் திரு. M.S.முத்துசாமி IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு வழங்கினார். காவல் துணை ஆணையர் திரு. M.S.முத்துசாமி IPS அவர்கள்அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார். விடுமுறை நாள் அன்று தன் குடுப்பத்துடன் நேரத்தை செலவிடாமல், ஆதரவற்றோருக்கு ஆதரவாக காவல் துறையினர் கலந்து கொண்டது, அங்கு உள்ளோரை மகிழ்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்ச்சியில் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் திரு. B.ஜெயராமன் கலந்து கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் திரு. முருகன், K -11 காவல் ஆய்வாளர் CMBT, திரு. N.ரவிந்திரன், T -4 காவல் ஆய்வாளர் மதுரவாயல், திரு.N. பெருமாள்சாமி, T-4 காவல் உதவி ஆய்வாளர் மதுரவாயல், திரு.N. ஜெயராஜ் T-4 காவல் நுண்ணறிவு (IS) மதுரவாயல், திரு.D. துரைராஜ் T-4 காவல் நிலைய எழுத்தாளர் மதுரவாயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி, தென்சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். திரு.முகமது மூசா. இது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவது பாராட்டுதலுக்குரியது.
[embedyt] https://www.youtube.com/watch?v=wWXCXqJ_cTg[/embedyt]