காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு மாவட்டங்களிலிரந்து அழைத்து வரப்பட்ட 1000 க்கும் அதிகமான பெண்கள் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு ஷிப்ட் அடிப்படையில் சுழற்சி முறையில் பணிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று விடுதியில் உணவு அருந்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு சிகிச்சையில் இருந்த ஊழியர்களில் எட்டு பேர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் குழுக்களில் தகவல்கள் பரவியுள்ளது.
இதனால் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சக பெண் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பேரின் நிலவரம் குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதற்கு நிர்வாகம் செவிசாய்க்காமல் மெத்தனமாக இருந்து வந்த காரணத்தினால் இரவு பணிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென சுங்குவார் சத்திரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக சென்ற எட்டு 8 பேரின் நிலவரம் தங்களுக்கு தெரிவித்தால் மட்டுமே இப் போராட்டமானது கைவிடப்படும் என பெண் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயக்கமடைந்து புகைப்படத்தை வைத்து இறந்ததாக வதந்தி பரப்பப்படுகிறது, யாரும் இறக்கவில்லை வதந்தியை பரப்ப வேண்டாம்,தங்கும் உணவு விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்