தர்மபுரி : தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி அவர்களின் தலைமையில் பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நிகழ்வானது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பேரணியாக பென்னாகரம் அம்பேத்கர் சிலை சந்திப்பில் தொடங்கி பென்னாகரம் பேருந்து நிலையம் வழியாக ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டது.