மதுரை : 31-வது தேசிய சாலைபாதுகாப்பு வார விழாவின் நான்காம் நாளான இன்று (23.01.2020) மதுரை மாநகரில் அமைந்துள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கபாண்டியன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இப்பேரணி மன்னர் திருமலை நாயக்கர் சிலை, புட்டுத்தோப்பு, மேலப்பொன்னகரம், எம்.ஜி.ஆர். சிலை, மதுரா கோட்ஸ் வழியாக வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை பற்றியும் ஆய்வாளர் அவர்கள் விரிவாக விளக்கமளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்