திருவாரூர் : ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி தேசிய குழந்தைகள் தினம், 19 ம் தேதி உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் 20 தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு குழந்தைகளுக்கான நடைபயண விழிப்புணர்வு பேரணி, இன்று (29.11.2023) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திருமதி. T.சாருஸ்ரீ இ.ஆ.ப அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் கலந்து கொண்டார்கள். விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தஞ்சை சாலை வழியாக விளமல் அரசு உயர் நிலை பள்ளியில் நிறைவடைந்தது.