சென்னை: நாடு முழுவதும் காவல்துறையின் தியாகத்தையும் சேவையையும் நினைவுகூரும் காவலர்களை ஊக்கப்படுத்திடவும் மற்றும் உற்சாகப்படுத்திடவும் தேசிய காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடி வரப்படுகின்றது.
இந்தியாவின் முன்னணி ஊடக சங்க அமைப்பான நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் அதன் இணை பிரிவான போலீஸ் நியூஸ் பிளஸ், சமூக பொறுப்புணர்வுடன் இணைந்து இந்த சிறப்பு நாளை மக்களிடையே அன்பும் பரிவும் பரப்பும் விதமாகக் கொண்டாடினர்.
இந்த விழாவில் சென்னை குடியுரிமை நிருபர் திரு. அசோக் குமார், நிருபர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, கொளத்தூர் விநாயகபுரம் சுப்பிரமணி நகரில் அமைந்துள்ள சமர்ப்பண சமூக சேவை மையத்தின் பொறுப்பாளர் திருமதி. பவானி அவர்களை சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சமர்ப்பண மையம் நடத்தும் மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் இல்லத்தை நேரில் சென்று குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காரம் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.
இந்த நிகழ்வு, “அக்டோபர் மாதம் – இல்லாதவருக்கு இயன்றதை செய்வோம்” என்ற உயர்ந்த எண்ணத்துடன்,
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் அமைப்புகள் மேற்கொண்டு வரும் சமூக நலப்பணியின் ஓர் சிறப்பான அத்தியாயமாக அமைந்தது.

இந்நிகழ்வின் மூலம் காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், சமூகத்தின் மறைக்கப்பட்ட போலீஸ் நாயகர்களை கௌரவிக்கும் முயற்சியையும், மனிதாபிமானத்தின் உண்மையான செய்தியையும் வெளிப்படுத்தினர்.