தர்மபுரி: தர்மபுரி இந்திய அரசு இளைஞர் நலன் (ம) விளையாட்டு அமைச்சகம், மை பாரத் மற்றும் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொடங்கி ராமாக்காள் ஏரி வரை “தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இந்த பேரணியை தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். . இதில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். பிரேமகுமாரி அவர்கள் தலைமை வகித்தார், மை பாரத் தருமபுரியின் துணை இயக்குனர் திரு . ட்ரவீன் சார்லஸ்டன் நிகழ்ச்சியின் விளக்கவுரை வழங்கினர். தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநர் திருமதி. சாந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய விரிவான கருத்துக்களை வழங்கினார்கள்.
















