கரூர் : கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 31.10.2020 இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் IPS அவர்களின் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து இந்திய நாட்டின் ஒற்றுமை,ஒருமைப்பாடு, பாதுகாப்பை பேணுவதற்கும், நல்லியல்புகளை மக்களிடையே பரப்புவதற்கும், ஒருங்கிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணுவதற்கும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.