திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு 31/10/2019 தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி, இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகள் எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையிலும் நடவடிக்கைகளிலும் சாத்தியப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வுவினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்கு வேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.