மதுரை மாவட்டம் பாலமேட்டில், நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பாக தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
இந்த பேரணி பாலமேடு காவல் நிலையம் முன்பாக தொடங்கி, பாலமேடு பஸ் நிலையம் மற்றும் கடைவீதி வழியாக ஊர்வலமாகச் சென்றது. இதில் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு, இளைஞர் சக்தி மற்றும் சமூக பொறுப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியும், கையில் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியும் பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை பாலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மலைச்சாமி மற்றும் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு. செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பேரணியில் கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் ஆனந், முனைவர் பழனிக்குமார், முனைவர் மணிகண்டன், முனைவர் குமரேசன் ஆகியோரும், மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி தீபா அவர்களும் கலந்து கொண்டு பேரணியை ஒழுங்குபடுத்தி சிறப்பாக நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















