திருப்பூர் : அஸ்ஸாமில் நடைபெற்ற கேலோ இந்தியா நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் திருப்பூர் மாநகரை சேர்ந்த சின்னாண்டிபாளையம் பிளாட் போஸ் அகாடாமி மேல்நிலைப் பள்ளியில் பயிலும், s.சன்மத் தர்ஷன் என்பவர் 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் 6.92 மீட்டர் நீளம் தாண்டி மூன்றாம் இடம் பிடித்தார்.
மாணவனது தேசிய அளவிலான சாதனையை திருப்பூர் மாநகர ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப) மற்றும் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப) ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள். மற்றும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தனது பெயரை பதிய செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.ரமேஷ் திரு.சுரேஷ் மற்றும் திரு.சந்தோஷ் அவர்களையும் ஆணையர் மற்றும் துணை ஆணையர் பாராட்டினார்கள்.
தமிழ்நாடு சார்பில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற ஊக்கமளித்த பள்ளிகளுக்கும் பள்ளியின் தாளாளர் திரு.ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் திருப்பூர் மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.