சென்னை: தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.12.2019 நேற்று மாலை கண்ணகி நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப, அடையார் துணை ஆணையாளர் திரு.பகலவன், இ.கா.ப, உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை