சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக Two wheeler திருடப்பட்டு வந்த நிலையில் காரைக்குடி
காவல் நிலைய கு. எண்கள் 420,534 to 547/2021 ச. பி. 379 இ. த. ச. ஆக வழக்குப் பதிவு செய்த பின்னர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர் திரு செந்தில் குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும்,
காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு வினோஜி . அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிய நிலையில்
இரவில் இருசக்கர வாகனத்தை உருட்டி வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ய அவர்கள் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசிக்கும் இராமசந்திரன் மற்றும் பாலமுருகன் என தெரிய வந்தது.
பின்னர் அவர்களை முறையாக விசாரணை செய்ய தாங்கள் செய்த பல குற்றங்களை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினோம். பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்