தூத்துக்குடி : தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் போலீசார் (17.11.2022), ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சண்முகம் மகன் மாரிமுத்து (35), மாடசாமி மகன் மாரியப்பன் (49), தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்தவர்களான வெள்ளை மகன் தங்கமாரி (42), காசிபாண்டி மகன் மகாலிங்கம் (37), மற்றும் தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த திக் விஜயன் மகன் கண்ணன் (43), ஆகிய 5 பேரும் சேர்ந்து பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளிகளான 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகளையும், ரூபாய் 17,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.