மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி,
தென்னை விவசாயசங்கம் சார்பில்,தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தென்னை விவசாய
சங்க மாவட்டத்தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்கத் மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கி, தேங்காய் உடைக்கும் போராட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில், மாவட்டச் செயலாளர் நாகேந்திரன், தென்னை விவசாயம் சங்க மாநிலக் குழு உறுப்பினர் முத்து பேயாண்டி உள்ளிட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர் . மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி