திருநெல்வேலி : திருநெல்வேலி தென்காசி காவல் ஆய்வாளர் திரு க.ஆடிவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அழகிய நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
காவல் நிலையம் செல்வதென்றாலே பொதுமக்களுக்கு ஏற்படும் பயத்தினை மாற்றும் விதமாக காவல் ஆய்வாளர் அவர்கள் காவல் துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
காவல் நூலகத்தில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் இளைஞர்கள் தங்களை அரசு தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் குரூப் 1 முதல் குரூப் 4 தேர்விற்கான புத்தகங்கள் மற்றும் பொழுது போக்கிற்கான புத்தகங்கள் உள்ளது. மேலும் ஓய்வறையில் தொலைக்காட்சி பெட்டியும் அடங்கியுள்ளது.
தினசரி சராசரி 30 வழக்கின் விசாரணை நடைபெற்றாலும் நூலகத்தில் எவ்வித சிறு சலசலப்பு ஏற்படா வண்ணம் அமைத்துக் கொடுத்துள்ளார். ஒரு நூலகத்தை உருவாக்கி அதனை பராமரிப்பது மிகவும் எளிதான காரியமல்ல அதையே சாத்தியப்படுத்தி உள்ள காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.