தென்காசி : தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ட்ராக் கார்க் ஐ.பி.எஸ், அவர்கள் (5/ 12 /2022)-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார் உயர் அதிகாரிகள் மற்றும் தனிப்படை காவல்துறையினருடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்தும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், அவர்கள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ், அவர்கள் உடன் இருந்தனர்.