திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு இருளர் காலணியை சேர்ந்த ஆறுமுகம் செல்வி இவர்களின் மூத்த மகன் ராசையா வயது 14. அத்திப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ராசையா படித்துள்ளார். இந்த நிலையில் மாலை வீட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்த தூளியில் ( ஊஞ்சல்) ராசையா விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கயிறாகப்பட்டது. சுருங்கிய காரணத்தால் ராசையா அதில் நன்றாக மாட்டிக் கொண்டதாகவும் இதனால் வெகு நேரம் அவர் அதிலிருந்து மீளுவதற்காக போராடி இருக்கிறார். ஆனால் கயிறு நன்றாக சுழன்ற காரணத்தால் ராசையாவின் கழுத்து நெருக்கம் ஏற்பட்டு தொங்கி கொண்டிருந்த நிலையில்
ராசையாவின் தாயார் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாமல் தன் மகன் இருப்பதை கண்டு அலறி அடித்து அருகில் உள்ளவர்களை கூப்பிட்டுள்ளார்.
உடனடியாக ராசையாவை மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு ராசையாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளார். இது குறித்து மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த காவலர்கள் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராசையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தூளியில் விளையாடிக் கொண்டிருந்த (14). வயது சிறுவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்தது. அத்திப்பட்டு இருளர்கள் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு