திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் உதவியுடன் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 15 ஊர்க்காவல் படையினருக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஆய்வாளர் கண்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்கள் அபுதல்ஹா மற்றும் ஜான்சன் ஜெயக்குமார் உடன் இருந்தார்கள். இதுகுறித்து ஆய்வாளர் கண்ணன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் பணி பாராட்டுக்குரியது.
அவர்கள் சேவை செய்யாவிட்டால் நாம் இப்போது நிம்மதியாக சுவாசிக்க முடியாது. நாம் தூய்மை காற்றை சுவாசிப்பதற்கு தூய்மைப் பணியாளர்களை பாராட்டியாக வேண்டும், என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா