திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்களான 18 தூய்மைப் பணியாளர்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன்,இ.கா.ப.,அவர்கள் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.சுப்பாராஜூ அவர்கள் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் கொரோனா காலத்தில் தங்களுக்கான பணிகள் போற்றுதலுக்குரியது எனவும், அனைவரும் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணி செய்யும் படி அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.