தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி அன்னை எஸ் பி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் நாளை (26.09.2021) நடைபெற உள்ள 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (25.09.2021) மாலை ஆறுமுகநேரி அன்னை எஸ் பி மஹாலில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1 உதவி காவல் கண்காணிப்பாளர் 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 50 காவல் ஆய்வாளர்கள், 108 உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், உதவி காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.