தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 23.02.2022 கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 621 மதுபாட்டில்களை கைப்பற்றி எதிரியை கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜா, மகாலிங்கம், சாமுவேல், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார் மற்றும் திருமணிராஜன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த எதிரியை சென்னைக்கு சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் ரமேஷ் கண்ணன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் கார்த்திக்ராஜா மற்றும் வடிவேல் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 303 மதுபாட்டில்களை கைப்பற்றி எதிரியை கைது செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறாருக்கு 3 மாத காலத்திற்குள் நீதிகுழுமத்தால் சட்டப்படி காப்பகத்திற்கு அனுப்பி வைத்த கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மாரிச்செல்வம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் எட்டையாபுரம் பேரூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது வயது முதிர்ந்த நடக்க இயலாத பெண் முதியவரை வாக்கு பதிவு செய்வதற்காக வாக்கு பதிவு செய்ய மையத்திற்கு சக்கர நாற்காலி மூலமாக அழைத்து வந்து ஜனநாயக கடமையாற்ற வைத்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காளீஸ்வரி என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் விளாத்திகுளம் பேரூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது வயது முதிர்ந்த நடக்க இயலாத ஆண் முதியவரை வாக்குப் பதிவு செய்வதற்காக வாக்கு பதிவு செய்யும் மையத்திற்கு சக்கர நாற்காலி மூலமாக அழைத்து வந்து ஆண் முதியவரை ஜனநாயகக் கடமையாற்ற வைத்த விளாத்திகுளம் காவல் நிலைய காவலர் கார்த்திகேயன் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விளாத்திகுளம் பேரூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது வயது முதிர்ந்த நடக்க இயலாத முதியவரை வாக்குப் பதிவு செய்வதற்காக வாக்குப் பதிவு செய்யும் மையத்திற்கு சக்கர நாற்காலி மூலமாக அழைத்து வந்து ஜனநாயக கடமையாற்ற வைத்த விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் கார்த்திக்ராஜா என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.