தூத்துக்குடி : கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சங்கிலிபாண்டி (33) என்பவர் கடந்த 28.10.2021 அன்று குடிபோதையில் அவரது மனைவியான பத்திரகாளி (30) என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பத்திரகாளி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எதிரி சங்கிலிபாண்டியை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான சங்கிலிபாண்டி என்பவர் மீதும்,
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மனைவி காளியம்மாள் (60) என்பவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (22) மற்றும் முத்தையாபுரம் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த குருசாமி மகன் மாடசாமி (21) ஆகிய இருவரையும் கயத்தாறு போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான நயினார் என்பவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் கயத்தாறு வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் 1) சங்கிலிபாண்டி மற்றும் முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்த சுடலைமணி மகன் 2) நயினார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து அவர்கள் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.