தூத்துக்குடி : பணம் வைத்து விளையாடப்படும் “ஆன்லைன் ரம்மி” (Online Rummy) போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததிற்கிணங்க, 1930-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் , 1988-ம் ஆண்டு சென்னை நகரக் காவல் சட்டம் மற்றும் 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றுக்கு உரிய திருத்தங்கள் செய்து ஒரு அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டு, 21.11.2020ம் நாளிட்ட அரசு சிறப்பிதழில் வெளியிட்ப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காவலங்களில் “ஆன்லைன் ரம்மி” போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், இவ்விளையாட்டை நடத்துவோரும், மேற்குறிப்பிட்டஅவசரசட்டப்படி உரிய அபராதத்திற்கும் சிறைதண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு, இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும் மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும் என்றும், இதுதொடர்பான இணையவழி பணப்பரிமாற்றங்கள் தடுக்கப்படும் என்றும், இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்விளையாட்டின் தாக்கத்தினை உணர்ந்து, “ஆன்லைன் ரம்மி”(Online Rummy) போன்ற பணம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இதன்மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி