தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் : (21.10.2022), காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம். கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 264. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நங்கையர்மூர்த்தி, தலைமையில் ஆயுதப்படை போலீசார் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் இ.கா.ப, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. சத்தியராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், மணியாச்சி திரு. லோகேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு திரு. சிவசுப்பு, காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு திரு. பேச்சிமுத்து, தூத்துக்குடி தென்பாகம் திரு. ராஜாராம், வடபாகம் திரு. ரபி சுஜின் ஜோஸ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் திருமதி. வனிதா, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு திரு. மயிலேறும்பெருமாள், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.