விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (23). இவரும அதே பகுதியைச் சேர்ந்த வீரசெல்வி (22). என்ற பெண்ணும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் வீரசெல்விக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8ம் தேதி வீரசெல்வி உயிரிழந்தார். காதல் மனைவி இறந்ததில் இருந்து சவுந்திரபாண்டியன் யாரிடமும் பேசாமல் கடும் துக்கத்தில் இருந்தார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சேத்தூர் காவல்நிலைய போலீசார் சவுந்திரபாண்டியன் உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி